சாப்பிட்ட பின்பு குளிக்கலாமா?
ADDED :5247 days ago
காலையில் எழுந்ததும் காலைக்கடன்கள் முடித்து, குளித்தபின்பே சாப்பிடவேண்டும். எக்காரணத்திற்காகவும், சாப்பிட்ட பின்பு குளிக்கவே கூடாது. சாப்பிட்ட உணவு செரிப்பதற்கு, வெப்பம் அவசியம் தேவை. சாப்பிட்ட பின்பு குளித்தால் உடலின் வெப்பம் குறைந்து விடும். எனவே, செரிப்பதற்கு நேரமாகும்.வயிற்றிலும் வீண் தொல்லை ஏற்படும். காலப்போக்கில் பசியும் எடுக்காது. இதனால் தான் குளிக்கும் முன்பு சாப்பிடக்கூடாது என்பர். இதையே பெரியோர், குளிக்கும் முன் சாப்பிட்டால் போஜனம் கிடைக்காது, எனவும் சொல்லி வைத்தனர்.