உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா மாரியம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

மகா மாரியம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

நாமக்கல்: அம்பாயிபாளையம் மகா மாரியம்மன், பகவதி அம்மன் கோவில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். நாமக்கல் அடுத்த பவித்திரம்புதூர், அம்பாயிபாளையத்தில், மகா மாரியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும், தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழா, நேற்று காலை, 11 மணிக்கு மாவிளக்கு பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, தூக்குத்தேரை எடுத்துக் கொண்டு பக்தர்கள் திருவீதி உலா வந்தனர். முக்கிய சாலைகள் வழியாக தூக்கிச் சென்ற தேர், மாலை, 6 மணிக்கு நிலை அடைந்தது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். இன்று (மே, 28) காலை, 11 மணிக்கு, பொங்கல் பூஜையும், கிடா வெட்டும், காட்டேரி வேஷமும் நடக்கிறது. தொடர்ந்து, தூக்குத்தேரை பக்தர்கள் எடுத்துச் சென்று திருவீதி உலா வருகின்றனர். நாளை (மே, 29) காலை, 11 மணிக்கு, தூக்குத்தேரை பக்தர்கள் அனைத்து வீதிகளுக்கும் எடுத்துச் செல்கின்றனர். மாலை, 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. தொடர்ந்து, தூக்குத்தேர், மாலை, 6 மணிக்கு நிலை அடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !