உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடைப்பாடி கோவில் கும்பாபிஷேக விழா பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

இடைப்பாடி கோவில் கும்பாபிஷேக விழா பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

இடைப்பாடி: இடைப்பாடி, குஞ்சாம்பாளையம் பகுதியில் உள்ள விநாயகர், பெரியமாரியம்மன், நாகம்மன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் வரும், 29ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இடைப்பாடி அருகே, குஞ்சாம்பாளையம் பகுதியில் உள்ள விநாயகர், பெரியமாரியம்மன், நாகம்மன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு நூதன ஆலயம் கட்டும் பணி நடந்து வந்தது. கோவில்களின் கட்டுமான பணி முடிந்து கும்பாபிஷேகம் வரும், 29ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு, கோபுரத்தின் மீதுள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுவதற்காக, கல்வடங்கம் காவிரி ஆற்றிலிருந்து, ஆறு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்த 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், குடங்களில் தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதில் ஊர்கவுண்டர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !