உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி : மேல்பட்டாம்பாக்கம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள மேல்பட்டாம்பாக்கம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 1ம் தேதி கோ பூஜை, அனுக்ஞை, வினாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. 2ம் தேதி காலை 7.30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், தன பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு இரண்டாம் கால பூஜைகள், தத்வார்ச்சனை நாடி சந்தானம் மகா பூர்ணாஹூதியும், காலை 9.15 மணிக்கு கடம் புறப்பாடு, இதனை தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !