உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒப்பிலியப்பன் கோவிலுக்கு 2 கிலோ தங்கத்தில் சகஸ்ரதாரை தட்டு காணிக்கை!

ஒப்பிலியப்பன் கோவிலுக்கு 2 கிலோ தங்கத்தில் சகஸ்ரதாரை தட்டு காணிக்கை!

கும்பகோணம்: திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன்கோவிலுக்கு கோவை பக்தர் 2 கிலோ தங்கத்திலான சகஸ்ரதா ரை தட்டை நேற் று உபயமாக வழங்கினார். கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள ஒப்பிலியப்பன்கோவில் ஸ்ரீ வேங்கடாசலபதி சுவாமி கோவில் உள்ளது. இங்கு நேற்று மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், அன்னப்பெரும்படையல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிகளின் உபயதாரர் கோவை மாணிக்கம் குடும்பத்தினர் சார்பில், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ 22 கிராம் எடைகொண்ட தங்கத்திலான சகஸ்ரதாரை தட்டை கோவிலுக்கு உபயமாக வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி கமிஷனர் தென்னரசுவிடம், பக்தர் மாணிக்கம் வழங்கினார். அப்போது, முன்னாள் அறங்காவலர்குழு தலைவர் ராயா.கோவிந்தராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள், திரளான பக்தர்கள் உடனிருந்தனர். மூலவர் கட திருமஞ்சனத்துக்கு இதுநாள் வரை வெள்ளி சகஸ்ரதாரை தட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இனி தங்கத்திலான சகஸ்ரதாரை தட்டு மூலவர் கட திருமஞ்சனத்திற்கு பயன்படுத்தப்படும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !