உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகப்பெருமான் வேல் தத்துவம்!

முருகப்பெருமான் வேல் தத்துவம்!

முருகப்பெருமான் வேல் எனும் ஆயுதத்தை கையில் தாங்கியுள்ளார்.இதனால் தான் அவர் வேலாயுதம் எனப்பட்டார். இது அவரது அன்னை பார்வதியால் தரப்பட்டது.ஒரு அம்மா தன் பிள்ளைக்கு இப்படி ஒரு ஆபத்தான ஆயுதத்தை கொடுத்து பிறரைக்கொல்ல ஏவலாமா? என்ற கேள்வி சிலரது மனதில் எழும். இதோ அதற்குரிய விளக்கம்.வேல் மிகவும் சக்தி வாய்ந்தது. சக்தியின்றி உடலில் உயிர் நிலைக்காது. தாயே தன் குழந்தைக்கு சக்தி தருபவள். அவள் தன் குழந்தையை தைரியத்துடன் வளர்க்க வேண்டும். வீரன் ஒரு முறை சாகிறான். கோழை தினமும் சாகிறான் என்ற வாக்குப்படி, அவள் தன் குழந்தைக்கு வீரத்தை ஊட்டி வளர்க்க வேண்டும் என்பதை வேல் தத்துவம் காட்டுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !