அருணாச்சலேஸ்வரருக்கு சந்தன காப்பு அலங்காரம்!
ADDED :3837 days ago
செஞ்சி: செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவில் சுப்ரமணியருக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்தனர். செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால், சந் தனம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர். சந்தன காப்பு அலங்காரம் செய்தனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும் பிரசாத விநியோகமும் நடந்தது. இதில் திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். சீனுவாசகன் அர்ச்சகர், பூஜைகளை செய்தார்.