ராஜகோபால சுவாமி கருட வாகனத்தில் உலா!
ADDED :3954 days ago
விருத்தாசலம்: வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா மூன்றாம் நாளில், ராஜகோபால சுவாமி கருட வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விருத்தாசலம் பெரியார் நகர் ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 30ம் தேதி கொடியே ற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை லட்சுமி நாராயணர் திருக்கோலத்தில் பல்லக்கில் உலா, பகல் 12:00 மணிக்கு திருமஞ்சனம், சேவா காலம், சாத்துமுறை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 8:00 மணிக்கு ராஜகோபால சுவாமி சமேத கோலத்தில், கருட வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.