பொயனப்பாடிகோவில் தேர்த் திருவிழா!
ADDED :3776 days ago
சிறுபாக்கம்: பொயனப்பாடி செல்லியம்மன் கோவில் தேர்த் திருவிழா நடந்தது. சிறுபாக்கம் அடுத்த பொயனப்பாடி செல்லியம்மன் கோவில் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அன்று காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று (4ம் தேதி) தேர்த் திருவிழாவையொட்டி, மாலை 4:00 மணிக்கு அலங்கரித்த திருத்தேரில் அம்மன் வீதியுலா நடந் தது. ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மங்களுர், மலையனுõர், விநாயகநந்தல், கச்சிமயிலூர், பாசார், காஞ்சிராங்குளம், அடரி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.