தணிகாசலம்மன் கோவிலில் சண்டி ஹோமம்!
திருத்தணி: தணிகாசலம்மன் கோவிலில், சண்டி ஹோமம் இன்று நடக்கிறது. திருத்தணி, அக்கைய்யா நாயுடு சாலையில் உள்ளது தணிகாசலம்மன் ÷ காவில். இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடந்து இரு ஆண்டுகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று காலை 8:00 மணிக்கு, கணபதி ஹோமம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, 108 கலசங்கள் வைத்து, கோ பூஜை, கலச ஸ்தாபனம், நவக்கிரகம், துர்கா, மகாலட்சுமி ÷ ஹாமம் மற்றும் பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தன. இன்று காலை 9:00 மணிக்கு, கலச அலங்காரம், சண்டி ஆவாரண பூஜை, சண்டி ஹோமம் ஆகியவை நடைபெறுகின்றன. தொடர்ந்து, சுகாசினி, கன்யா, தம்பதி, பிரம்மச்சாரி, சர்ப, அஸ்வ மற்றும் கோ பூஜைகள் நடக்கின்றன. பிற்பகல் 12:00 மணிக்கு, கலச ஊர்வலம் மற்றும் மூலவருக்கு கலசநீர் ஊற்றி அபிஷேகம், 108 சங்காபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். மாலை 5:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சி றப்பு அலங்காரத்தில் நகர வீதிகளில் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.