உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தணிகாசலம்மன் கோவிலில் சண்டி ஹோமம்!

தணிகாசலம்மன் கோவிலில் சண்டி ஹோமம்!

திருத்தணி:தணிகாசலம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்து இரண்டாம் ஆண்டை முன்னிட்டு, 6.6.15 ல்மகா சண்டி ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது.திருத்தணி அக்கைய்யா நாயுடு சாலையில் உள்ள, தணிகாசலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்து, இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம், கணபதி பூஜை நடந்தது.10௮ சங்காபிஷேகம்விழாவை ஒட்டி, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 108 கலசங்கள் வைத்து, கோ பூஜை, கலச ஸ்தாபனம், நவகிரகம், துர்கா, மகாலட்சுமி ஹோமம், மற்றும் பூர்ணாஹூதி தீபாராதனையும் நடந்தது.நேற்று காலை 9:00 மணிக்கு, கலச அலங்காரம், சண்டி ஆவாரண பூஜை, சண்டி ஹோமம் நடந்தது.மதியம், 12:00 மணிக்கு, கலச ஊர்வலம் மற்றும் மூலவருக்கு

கலசநீர் ஊற்றி அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தது. பின்னர், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை 5:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !