சிங்கம்புணரி செல்வவிநாயகர்கோயில் கும்பாபிஷேகவிழா!
ADDED :3777 days ago
சிங்கம்புணரி:கிழவயலில் செல்வவிநாயகர், கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அனுக்ஞை,விக்னேஷ்வரபூஜை,பூரணாகுதி,யாகசாலை பூஜைகள் ராஜப்பா குருக்கள் தலைமையில் நடந்தது.
காலை 8.45 மணிக்கு சங்கிலிக்கருப்பர்கோயில்,10 மணிக்கு செல்வவிநாயகர்,பாலமுருகன் கோயில் கோபுரங்களில் புனித நீராட்டு நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது. சின்ன கிழவயல்,பெரிய கிழவயல்,மணியாம்பட்டி கிராமத்தினர் ஏற்பாடு செய்தனர்.