உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேக கோலாகலம்!

மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேக கோலாகலம்!

லாலாபேட்டை : லாலாபேட்டை அடுத்துள்ள மேட்டு மகாதான புரம் மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேகம் கடந்த, 2002ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதால், மீண்டும் கோவில் பாலாலயம் செய்யப்பட்டது.தொடர்ந்து, மகாலட்சுமி அம்மன் கோவிலில் உள்ள பரிஹார தெய்வங்களான, ராமசாமி, பைரவர், வீரபத்திரரர், நந்தி, கணபதி ஆகிய சிவ கணங்கள் முதலிய பரிவார ஸ்வாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நேற்று காலை, 10.45 மணிக்கு நடந்தது.சிவஸ்ரீ சதாசிவ குருக்கள் தலைமையில், அர்ச்சகர்கள் கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் (பொ) யுவராஜ், கோவில் பூசாரி பெரியசாமி, ஆர்.டி.ஓ., சக்திவேல் உள்ளிட்டோர் செய்தனர்.கரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,ஜோசி நிர்மல் குமார் தலைமையில், 1,000க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

கும்பாபிஷேக விழாவில், பெங்களூரு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, கோவை, வெள்ளக்கோவில், காங்கேயம், கரூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !