திருச்செந்தூர் கோயிலில் ஒருங்கிணைந்த தகவல் மையம் திறப்பு விழா
திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய ஒ ருங்கிணைந்த தகவல் மையத்தினை கோயில் இணை ஆø ணயர் திறந்து வைத்தார்.மேலும் பல லட்சம் மதிப்பில் கட்டடம் கட்டுவதாக கூறினார். நேற்று முன்தினம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவா மி கோயில் சண்முக விலாசம் மண்டபத்தில் கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய ஒருங்கிø ணந்த தகவல் மையத்தினை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; இந்த தகவல் மையம் 1.59 லட்சம் மதிப்பீட்டில் அமைந்துள்ளது. இந்த தகவல் மையத்தில் தமிழகத்தில் உள் ள முக்கிய கோயில்கள் பற்றிய விபரங்கள், பூஜை காலங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் நடைதிறப்பு நேரங்கள், பூஜைகாலங்கள், திருவிழாக்கள் பற்றிய தகவல்கள் அபிஷேக கட்டணங்கள், அர்ச்சனை கட்டணங்கள், விடுதி கட்டணங்கள் பற்றியும், முக்கிய கோயில்களுக்கு சென்று வர போக்குவரத்து பற்றிய தகவல்கள் அறிந்து கொள்ளலாம். இந்த தகவல்மையம் கோயில் நடைதிறந்து இருக்கும் காலங்களில் திறந்திருக்கும். திருச்செந்தூர் முருகன் கோயில் தங்கத்தேர் அருகில் 98 லட்சம் மதிப்பீட்டில் நவீன பாதுகாப்பு வசதியுடன் அறைகள் கொண்ட சஷ்டி மண்டபம் கட்டப்பட உள்ளது. 92 லட்சம் மதிப்பில் மூவர் சமாது அருகில் மாடியுடன் கூடிய நவீன வசதி கொண்ட பக்தர்கள் தங்குவதற்காக மண்டபம் கட்டப்பட உள்ளது. சண்முக விலாசத்தில் இருந்து நாழிக்கிணறு செல்லும் பாதை பழைய கூரை அகற்றிவிட்டு 81 லட்சம் மதிப்பில் அகலமான கான்கிரீட் கூரையுடன் கூடிய நடைபாதை அமைக்கப்படவுள்ளது. கடற்கரையில் 41 லட்சம் மதிப்பில் துருப்பிடிக்காத மின்கம்பங்களும் மற்றும் திருச்செந்தூர் கோயில் உபகோயிலான கிருஷ்ணாபுரம் (திருநெல்வேலி) பெருமாள் கோயில் மரத்தேர் அமைக்கும்பணி நடந்து வருகிறது. மேலும் இக்கோயிலுக்கு சொ ந்தமான நிலங்களை விவசாயம் செய்வதற்கு பதிலாக மூ ன்று இடங்களில் செங்கல் சூளை நடந்து வந்தது. அதை நேரில் பார்வையிட்டு அவர்களது குத்தகையை ரத்து செய்ய வழக்கு தொடரப்பட்டு உள்ளது. கோயிலுக்கு சொந்தமான இடங்கள் உள்ள பகுதியில் அறிவிப்பு பலகைகள் வைக்கபட உள்ளது. யானைகள் பராமரிப்பு பற்றிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டபோது கீழ்க்கண்ட தகவல்களை மருத்துவர்கள் கூறினர். யானைகள் பக்தர்களை ஆசிர்வதிக்க துதிக்கையை தலையில் வைப்பதால் தலைமுடி, பொடுகுகள் துதிக்கை உள் ளே சென்று யானை நோய்வாய்பட வழியுள்ளது. எனவே யானைகள் ஆசீர்வாதம் செய்ய அனுமதிக்கக்கூடாது. யானைகள் புல்தரையில் அதிக நேரம் நிற்க வேண்டும், சிமெண்ட் தரையில் அதிக நேரம் நிற்க கூடாது, உணவு வகைகள் சீரகம், கடுகு, பச்சரிசி உள்ளிட்டவை 3 கிலோவில் இருந்து 8 கிலோவரை உயர்த்தி கொடுக்கப்பட வே ண்டும் என கூறியுள்ளனர். அதன்படி பராமரிக்க பாகன்களிடம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல்களை கோயில் இணை ஆø ணயர் பாஸ்கரன் கூறினார். முதுநிலை கணக்கர் வெங்கடாசலம், உள்துறை மே லா ளர் சுப்பிரமணியன், உதவிபொறியாளர் முருகன், சிவா ஆகியோர் உடனிருந்தனர்.