காரைக்கால் ராஜசோளீச்சுரர் கோவில் சிம்ம வாகனம் வெள்ளோட்டம்!
ADDED :3780 days ago
திருப்பட்டினம் ராஜசோளீச்சுரர் கோவிலில் நேற்று நூதன சிம்ம வாகனம் வெள்ளோட்டம் சிறப்பாக நடந்தது.
காரைக்கால் திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ ராஜசோளீச்சுரர் கோவில் நேற்று நூதன சிம்ம வாகனம் வெள்ளோட்டம் நடந்தது. அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ ராஜசோளீச்சுரர் கோவில் கடந்த சில ஆண்டுகளாக சுவாமி வீதியால செல்ல வாகனம் இல்லாமல் புதிதாக சிம்ம வாகனம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தனர்.இதன் அடிப்படையில் ரூ.90 ஆயிரம் மதிப்பில் தோக்குமரத்தில் சிம்ம வாகனம் செய்யப்பட்டு நேற்று காலை எஜமானர்கள் சங்கல்பம்,கலச பூஜைகள் ஆரம்பம் மஹா பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது.பின் நூதன சிம்ம வாகனம் வெள்ளேட்டம் நடந்தது.விழாக்கான ஏற்பாடுகளை அபிராமி அம்மன் தேவஸ்தானம் அறங்காவலர் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.