வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவில் சம்ரோஷணம்!
வில்லியனூர்: வில்லியனூர் தென்கலை வரதராஜபெருமாள் கோவில் சம்ரோஷணம் நேற்று காலை நடந்தது.வில்லியனூர் பெருந்தேவி தாயார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் சம்ரோஷணம் விழா கடந்த 6ம் தேதி மாலை துவங்கியது. யாக சாலை பூஜைகள் மற்றும் சிறப்பு திருமஞ்சன விசேஷங்கள் நடந்தன. நேற்று காலை 6:55 மணிக்கு திருக்கோவிலுர் ஜீயர் சுவாமிகள் தலைமையில் சம்ரோஷணம் நடந்தது. முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் நமச்சிவயாம், கார்த்திகேயன், முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன், இந்து அறநிலையத் துறை ஆணையர் தில்லை வேல், திருப்பணி தொழில்நுட்ப குழு கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, என்.ஆர்., காங்., பிரமுகர்கள் சரவணன், மங்கலம் தொகுதி சுகுமாரன், திருக்காமீஸ்வரர் கோவில் சிறப்பு அதிகாரி மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கோவில் மற்றும் பக்தர்கள் சார்பில் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கேவில் சிறப்பு அதிகாரி ஹரிஹர நமோ நாராயணன், திருப்பணி கமிட்டி தலைவர் உலகநாதன் மற்றும் உறுப்பினர்கள் செய்தனர்.