உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பராயன் கன்னிமார் கோவில் ஆண்டு விழா!

கருப்பராயன் கன்னிமார் கோவில் ஆண்டு விழா!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கருப்பராயன் கன்னிமார் கோவிலில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.  பொள்ளாச்சி வடக்கிபாளையம் ரோடு, ஆர்.பொன்னாபுரத்தில், கருப்பராயன் கன்னிமார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், கடந்தாண்டு பொதுமக்களின் கூட்டு முயற்சியால் நிர்மாணிக்கப்பட்டு, கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. கும்பாபிேஷகம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் காலை, 10:00 மணிக்கு கணபதி பூஜையும், 11:00 மணிக்கு மகா அபிேஷகமும், தொடர்ந்து அலங்கார பூஜையும் நடைபெற்றது. அன்று மதியம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !