நல்வழி காட்டியவர்கள்!
அல்லாஹ்வின் திருத்துõதராக அனுப்பப்பட்டவர்கள் நபிகள் எனப்படுகின்றனர். மனித இனத்திற்கு நல்வழி காட்டுவதற்காக அல்லாஹ்வின் கட்டளைப்படி தோன்றியவர்கள் இவர்கள்.முதல் துõதராக ஆதம் (அலை) அவர்கள் தோன்றினார். இவரே முதல் மனிதர் எனப்படுகிறார். இறுதியாக, முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் என்னும் நபிகள் நாயகம் தோன்றினார். இவ்விருவருக்கும் இடையே பல நபிகள் தோன்றி மனித சமூகத்தை நல்வழிப்படுத்தியுள்ளனர். இதை குர்ஆன், (நபியே!) நிச்சயமாக நாம், உமக்கு முன்னரும் (பல) துõதர்களை அனுப்பி இருக்கின்றோம். அவர்களில் சிலருடைய சரித்திரத்தையே நாம் உமக்கு கூறியிருக்கின்றோம். அவர்களில் பலருடைய சரித்திரத்தை நாம் உமக்குக் கூறவில்லை, என்ற வசனம் நிரூபிக்கிறது.தற்காலத்தில் நபிகள் நாயகத்தின் கருத்து போதனைகளே பின்பற்றப்படுகிறது. இதற்கு காரணம் இருக்கிறது.நபிகள் நாயகத்திற்கு முன்பு தோன்றிய துõதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட சட்டங்கள், அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு ஏற்புடையதாக இருந்தது. ஆனால், நபிகள் நாயகத்திற்கு வழங்கப்பட்ட கட்டளைகளும், சட்டங்களும் உலகத்தின் இறுதிக்காலம் வரையில் ஏற்புடையதாக அருளப்பட்டது.