உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!

நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!

நேர்மை மிக்க நல்லவர்கள் வாழ்வில் தடைகளைச் சந்தித்தாலும், என்றாவது ஒருநாள் வெற்றி பெற்றே தீருவார்கள். உலகிலேயே நாக்கு தான் மிகப்பெரியஆயுதம். அதை அடக்கி விட்டால், மற்ற அனைத்தும் தானாகவே அடங்கி விடும்.   தங்கத்தைத் தேடாதே. உன் கழுத்துக்கு தங்க நகைள் தேவையில்லை. உன் மனதை தங்கமாக்கினால் போதும். அன்பே வடிவான கடவுளை மனதில் குடியமர்த்தி விடு. எல்லா இன்பமும் பெறுவாய்.  செல்வம் ஓரிடத்தில் நில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும். கடவுள் ஒருவரே என்றென்றும் நிலையானவர்.  தன்னை அறியாதவன் அறியாமையில் இருப்பதாகப் பொருள். தன்னை அறிந்தால் நீ கடவுளை அறிந்தவன் ஆகிறாய்.  நல்லவன் என்று செருக்குற்று அலையாதே. உன்னிலும் நல்ல மனிதர்கள் பலர் உலகில் இருக்கவே செய்கிறார்கள்.  பிறரைக் கீழாக கருதுபவன் தன்னைத் தானே கீழ்நிலையை அடைய நேரிடும் என்பதை நினைவில் கொள்.  அறிவாளி சிறிதும் பிறரை அவமதிப்பாக நடத்த விரும்ப மாட்டான். பொறாமை, கோபம் போன்ற உணர்ச்சிகளுக்கு இடம் தர மாட்டான்.   கோபத்தில் பிறரைக் குறை கூறித் திரிபவன் முட்டாள். அவனைத் திரும்பிக் கூட பார்க்க வேண்டாம்.  பிறப்பு, இறப்பு இரண்டும் உயிரைப் பற்றிக் கொண்டிருக்கும் பெரிய நோய்.  உலகம் உன்னை நல்லவன் என்று போற்றுவதற்கும், கெட்டவன் என்று துõற்றுவதற்கும் நீயே காரணம்.   மற்ற நண்பர்கள் ஒரு எல்லையில் நின்று விடுவார்கள். ஆனால், மனம் என்ற நண்பன், ஒருபோதும் உன்னை விட்டு விலகுவதில்லை. தன்னம்பிக்கையுடன் செயல்படும் மனிதர்கள் விரல் விட்டு எண்ணும் நிலையில் தான் இருக்கின்றனர்.அதில்  ஒருவனாக நீயும் இரு.   கடவுள் ஒருவரே உனக்கு உற்ற துணை என்ற உண்மையை உணர்ந்துவிட்டால் யாருக்கும் பயப்படத் தேவையிருக்காது.  யாரும் உன்னைப் பார்க்கவில்லை என்று துணிவுடன் பாவத்தில் ஈடுபட்டு மறைத்து விட முயற்சிக்காதே.   பிறர் பாராட்ட வேண்டும் என்று தர்மம் செய்தால் மன நிம்மதியை இழக்க நேரிடும். மனம் விரும்பி செய்யும் தர்மமே சிறந்தது.  (மகான் சாந்தானந்தர்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !