உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவாலயத்தில் இருக்க வேண்டிய 25 பகுதிகள்!

சிவாலயத்தில் இருக்க வேண்டிய 25 பகுதிகள்!

சிவன் கோவிலுக்குள் 25 பகுதிகள் இருக்க வேண்டும். (சில கோவில்களில் பணிகள் பாதியில் நின்றதன் காரணமாக இவற்றில் சில இல்லாமல் இருக்கலாம்) அவை என்ன தெரியுமா?

11. சுவாமி மூலஸ்தானம்.
12. அர்த்த மண்டபம்: சிவாச்சாரியார்கள் பூஜை செய்யும் இடம்
13. மகா மண்டபம்: பக்தர்கள் தரிசனத்திற்காக நிற்கும் இடம்
14. சண்டிகேஸ்வரர்/ சண்டிகேஸ்வரி சன்னிதி
15. அம்பாள் மூலஸ்தானம்
16. நிருத்த மண்டபம் (கலை நிகழ்ச்சிகளுக்கானது)
17. பள்ளியறை
18. நடராஜர் சன்னிதி
19. துவஸ்தம்ப மண்டபம் (கொடிமரம்இருக்குமிடம்)
10. மடப்பள்ளி (நைவேத்யம் தயாரிக்குமிடம்)
11. அப்பர், சுந்தரர், சம்பந்தர்,மாணிக்கவாசகர் சன்னிதி
12. கோசாலை(பசு பராமரிப்பு இடம்)
13. அம்பாள் கோபுரம்
14. சந்தான குரவர் சன்னிதி
15. வாகன சாலை (விழாக்கால சப்பரங்கள்வைக்குமிடம்)
16. விநாயகர் சன்னிதி
17. முருகன் சன்னிதி
18. வசந்த மண்டபம்
19. பைரவர் சன்னிதி
20. சூரியன் சன்னிதி
21. சந்திரன் சன்னிதி
22. ராஜ கோபுரம் அல்லது நுழைவு வாயில்
23.  அபிஷேக தீர்த்தக் கிணறு அல்லது தெப்பக்குளம்
24. மடப்பள்ளிக் கிணறு (நைவேத்ய நீர் எடுப்பது)
25.  தட்சிணாமூர்த்தி சன்னிதி இது தவிர பெரிய சிவன் கோயில்களில் சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனர் சன்னிதி, யாகசாலை, ஆகம நுõலகம் ஆகியவை இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !