காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
ADDED :5242 days ago
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அடுத்த செட்டிமாரம்பட்டியில் தோட்டிப்பாறை கிராமத்தில் ஸ்ரீ மஹா கணபதி, மாரியம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 10ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வரும் 9ம் தேதி காலை 6 மணிக்கு கங்கா பூஜையும், 12 மணிக்கு அஷ்டதிக் பூஜை, 1 மணிக்கு கலச பூஜையும், 2 மணிக்கு கணபதி பூஜையும், 4 மணிக்கு கணபதி ஹோமமும், 6 மணிக்கு நவக்கிரக ஹோமமும், இரவு 11 மணிக்கு சண்டிஹோமமும் நடக்கிறது. 10ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நாடி சந்தானமும், 3 மணிக்கு கும்பாபிஷேக பூஜை துவக்கமும், 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 11 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு கலை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.