மாசாணி அம்மனுக்கு பொற்பாதங்கள் காணிக்கை!
ADDED :3772 days ago
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மனுக்கு, ௫ லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தங்க பொற்பாதங்களை பக்தர் ஒருவர் காணிக்கையாகச் செலுத்தினார்.
கோவை மாவட்டம், ஆனைமலை, மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. வேண்டு தல்கள் நிறைவேறிய பக்தர்கள், கோவிலுக்கு காணிக்கை செலுத்துவது வழக்கம். நேற்று காலை, இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த, ஆனைமலை பகுதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர், அம்மனுக்கு, 190 கிராம் எடையுள்ள, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தங்கத்தால் ஆன, பொற்பாதங்களை காணிக்கையாக வழங்கினார்.