உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் தேர்கள் மறுசீரமைப்பு!

ராமேஸ்வரம் கோயில் தேர்கள் மறுசீரமைப்பு!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தேர்கள் சிறிய இரும்பு சக்கரங்கள்
பொருத்தி மறு சீரமைப்பு செய்யும் பணி துவங்கியது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள முருகன், விநாயகர், சண்டீகேஸ்வரர் சுவாமிகளின் மரத்தேர்களின் சக்கரங்கள் சேதமடைந்தன. கடந்த ஓராண்டுக்கு முன்பு திருச்சி பெல் நிறுவன இன்ஜினியர் ஆலோசனை படி மூன்று தேர்களின் பழமையான மரச்சக்கரங்களை அகற்றி புதிய இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டது.

இதன் பின் வீதியுலா வந்த தேர்கள் முக்கிய வீதிகளின் வளைவுகளில் திரும்பியபோது முன்புற இரும்பு சக்கரம் மரத்தேரை சேதப்படுத்தியதால் அதனை மறு சீரமைப்பு செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி முன் புற இரும்பு சக்கரத்தை அகற்றி சிறிய அளவிலான புதிய இரும்பு சக்கரம் பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !