உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளம்மன் கோவிலில்108 சங்காபிஷேகம்!

அங்காளம்மன் கோவிலில்108 சங்காபிஷேகம்!

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் நேற்று முன்தினம் இரவு 108 சங்காபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு 108 சங்குகள் மற்றும் கலச பிரதிஷ்ட்டை செய்தனர். தொடர்ந்து சிறப்பு யாகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு அங்காளம்மனுக்கு 108 சங்கு தீர்த்தம் மற்றும் கலசாபிஷேகம் நடந்தது.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் பூசாரி, தலைமை பூசாரி சேகர், அறங்காவலர்கள் ஏழுமலை, காசி, சரவணன், பெருமாள், சின்னதம்பி, மேலாளர்கள் முனியப்பன், மணி மற்றும் கோவில் ஊழியர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !