பந்தலுார் கிருத்திகை பூஜைகள்!
ADDED :3772 days ago
பந்தலுார்: பந்தலுார் அருகே கொளப்பள்ளி குறிஞ்சிநகர் முருகன் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில், காலை, 5:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கிய பூஜையை தொடர்ந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு; ஊர்வலம் நடந்து. மேலும் பூஜைகளை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஊட்டி எம்.பாலாடா கீழ்அப்புக்கோடு ஆனந்தமலை கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், சித்தி செல்வ விநாயகர், ஆனந்தமலை முருகன், நவகிரகங்கள், ஏழு ஹெத்தை அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் , சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.