கருப்பராயசாமி கோவில் திருத்தேர்நாளை வெள்ளோட்டம்!
அன்னுார்: அன்னுார் கருப்பராயசாமி கோவில் திருத்தேர் வெள்ளோட்டம் நாளை நடக்கிறது.
அன்னுார் சிறுமுகை ரோடு, கைகாட்டியில், பிரசித்தி பெற்ற கருப்பராயசாமிகலாமணி கோவில் உள்ளது. இக்கோவில் அருள்வாக்கு சொல்வதில் பிரசித்தி பெற்றது.இங்கு புதிதாக, 22 அடி உயரத்திற்கு, வேங்கை மரத்தில் கருப்பராயசாமிக்கு தேர் அமைக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கியது. தேர் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. தேரில், முன்புறம் இரு குதிரைகள், முன்புறம் மூன்று அடி சக்கரங்களும், பின்புறம் 3.5 அடி விட்டமுள்ள சக்கரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேரின் முன்பகுதியில் பிரம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தேரின் வெளிப்பகுதியில் விநாயகர், மாசானியம்மன், கருப்பசாமி, கந்தர்வன், மாரியம்மன் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. இத்துடன், 11 அடி உயரத்தில் விநாயகர் தேரும் அமைக்கப்பட்டுள்ளது.தேர் பணி முடிந்ததையடுத்து, வெள்ளோட்டம் வரும், 16ம் தேதி அமாவாசை நாளன்று காலை 11:00 மணிக்கு நடக்கிறது. மதியம் அமாவாசை சிறப்பு வழிபாடும், அன்னதானம் வழங்குதலும் நடக்கிறது.அரசு போக்குவரத்து கழக சிறப்பு பஸ் அன்னுாரிலிருந்து இயக்கப்படுகிறது. தேரோட்டம் ஜூலை 22ம் தேதி நடக்கிறது. ஏற்பாடுகளை பக்தர்கள் செய்து வருகின்றனர்.