உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி புரவி எடுப்பு விழா!

சிங்கம்புணரி புரவி எடுப்பு விழா!

சிங்கம்புணரி: பிரான்மலை பொய்சொல்லாமெய் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா
நடந்தது. 15 நாட்களுக்கு முன் புரவிகள் செய்ய கிராமத்தின் சார்பில் பிடிமண் கொடுத்தனர்.
நேற்று முன்தினம் பாப்பாபட்டி சூளை பொட்டலில் இருந்து பிரான்மலைக்கு புரவிகள் கொண்டு
வரப்பட்டது. நேற்று மாலை அங்கிருந்து கோயிலுக்கு சென்றது. மூலவர் ஐயனார், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பிரான்மலை ஐந்து ஊர் கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !