முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :3778 days ago
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், பண்ணாரி செல்லும் ரோட்டில் உள்ள தாண்டாம்பாளையம்
சக்தி விநாயகர் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.நேற்று
காலை, 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, யாகசாலை பூஜை, மஹா தீபாராதனை பூஜைகள்
நடந்தது.யாகசாலையில் இருந்த தீர்த்தங்கள் எடுத்து செல்லப்பட்டு, கலசத்துக்கு ஊற்றி
கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, பக்தர்கள் "மாரியம்மா, மாரியம்மா என்று கோஷமிட்டனர்.
இதையடுத்து அபிஷேக அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது.பண்ணாரி அம்மன்
குழுமங்களின் தலைவர் பாலசுப்ரமணியம், செந்தில் குழுமங்களின் தலைவர் ஆறுமுகசாமி,
காமதேனு கலை அறிவியல் கல்லூரி தலைவர் பெருமாள்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.