உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் சீதா கல்யாண உற்சவம்!

விருத்தாசலம் சீதா கல்யாண உற்சவம்!

விருத்தாசலம்: விருத்தாசலம் நாம சங்கீர்த்தன பக்த ஜனசபா சார்பில் சீதா கல்யாண மகோற்சவம் நடைபெற்றது.

சீதா கல்யாண மகோற்சவ விழா, கடந்த 19ம் தேதி துவங்கியது. காலை உஞ்ச வ்ருத்தி, தோடய மங்களம் குருகீர்த்தனை, பஞ்சபதி, கணேஸாதி தியானங்கள், ஜானவாசம், நாதஸ்வரம் இன்னிசை, திவ்யநாம சங்கீர்த்தனம், டோலோத்ஸவம் நிகழ்ச்சிகள் நடந்தன.

முக்கிய நிகழ்வாக நேற்று காலை 7:00 மணிக்கு ஸம்ப்ரதாயஉஞ்சவ்ருத்தி, 8:00மணிக்கு சீதா கல்யாண பஜனை, 12:30க்கு மேல் 1:00 மணிக்குள் சீதா கல்யாண மகோற்சவம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 4:00க்கு மேல் வசந்த மாதவகலசம்,நாம சங்கீர்த்தன புறப்பாடு, பவ்வளிம்பு, அனுமன் உற்சவம், மங்களஆரத்தி நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !