திருவாரூர் அலிவலத்தில் மாணிக்கவாசகர் குரு பூஜை விழா!
ADDED :3864 days ago
திருவாரூர்: திருவாரூர் அருகே அலிவலத்தில் மாணிக்க வாசகர் குரு பூஜை வெகு விமர்சி யாக நடந்தது.
திருவாரூர் அருகே அலிவலத்தில் மாணிக்கவாசகருக்கு அப்பகுதியினர் கோ வில் நிறுவி சிலை அமைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். அத்தடன் ஆண் டு தோறும் குரு பூஜையை வெகு விமர்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான விழா நேற்று காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் அம்மை–அப்பர் வேள்வி துவங்கியது. காலை 7.00 மணிக்கு மாணிக்க வாசகர்க்கு திருமஞ்சனமும், 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை சிறப்பு சொற்பொழிவும், 10.30 மணியில் இருந்து 12.00 மணி வரை சிறப்பு அர்ச்சனை நடந்தது. பகல் 12.00 மணி முதல் 2.00 மணி வரை அறுசுவை விருந்து வழங்கினர். விழாவில் சுற்றுப்பகுதியினர் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அப்பகுதி விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.