நெல்லிக்குப்பம் பிரம்மோற்சவம் துவக்கம்!
ADDED :3768 days ago
நெல்லிக்குப்பம்: நடனபாதேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரத்தில் உள்ளதாளாம்பிகை சமேத நடனபாதேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடந்தது.அதனையொட்டி கொடிமரத்துக்குசிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையை தொடர்ந்து கொடியேற்றப்பட்டது.தினமும் சிறப்புஅபிஷேகமும் பல்வேறு வாகனங்களில் சுவாமிவீதிஉலா நடக்கிறது. 27ம் தேதி திருக்கல்யாணமும், 29ம் தேதி ரதஉற்சவமும், ஜூலை 3ம் தேதி தெப்பல்உற்சவமும் நடக்கிறது.