அருப்புக்கோட்டை கோயிலில் பக்தர்கள் அவதி!
ADDED :3766 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு மீனாட்சி சன்னதியின் உட்புறம் உள்ளே நுழையும் இடத்தில் தரையில் உள்ள கல் பெயர்ந்துள்ளது. இது தெரியாமல் பக்தர்கள் தடுக்கி விழுகின்றனர்.
தற்போது ஆனி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. பெயர்ந்துள்ள கல்லை பக்தர்களின் நலன் கருதி கோயில் நிர்வாகம் சீரமைக்க வேண்டும்.