சொக்கநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா!
ADDED :3757 days ago
நடுவீரப்பட்டு: கடலூர் அடுத்த சி.என்.பாளையம் மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் கோவிலில் நேற்று ஆனி திருமஞ்சன விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று மதியம் 12:00 மணிக்கு விநாயகர், சொக்கநாதர், மீனாட்சி அம்மன், வள்ளி தேவசேனா சுப்ரமணியர் மூலவரு க்கும்,சிவகாமசுந்தரி,நடராஜர் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பிற்பகல் 3:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நடராஜர் சிவகாம சுந்தரியுடன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உட்பிரகார உலாவாக வந்து அருள்பாலித்தார்.