சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்!
ADDED :3756 days ago
சிதம்பரம்: சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவிலில் ஆனித் திருமஞ்சனத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. சிதம்பரம் சவுந்திரநாயகி அம்மன் சமேத அனந்தீஸ்வரர் சுவாமி கோவிலில் ஆனித் திருமஞ்சனத்தையொட்டி நடராஜர் சுவாமிக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிவனடியார்கள் பன்னிரு திருமுறை பாடி வழிப்பட்டனர். பின்னர் சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நடராஜர் கோவில் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.