வெங்கடாஜலபதி கோயில் ஆனிவிழா: கொடியேற்றத்துடன் துவங்கியது!
ADDED :3870 days ago
சாத்தூர்: சாத்தூர் வெங்கடாஜலபதி கோயில் ஆனித்திருவிழா நேற்றுகாலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி கோயில் கொடி மரத்திற்கு சந்தனம், இளநீர், பால், பன்னீர் ஆகியவற்றால் ரெங்கநாதபட்டர் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளை செய்தார். இதன் பின் மகாதீபாராதனை நடந்தது. சாத்தூர் மற்றும் சுற்றுக்கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். 12 நாள் விழாவில் தினமும் காலையில் பல்லக்குசேவை , மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி ரதவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 2 காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்தனர்.