உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் இந்த வருடம் இரண்டு பிரம்மோற்சவம்!

திருமலையில் இந்த வருடம் இரண்டு பிரம்மோற்சவம்!

திருப்பதி: திருமலையில் நடைபெறும் விழாக்களிலேயே பிரதானமாக கருதப்படுவது பிரம்மோற்சவ விழாதான்.ஒன்பது நாட்களும் மலையப்ப சுவாமி தேவியருடன் விதவிதமான அலங்காரத்தில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஒவ்வொரு மூன்று வருடத்திற்கு ஒரு முறை இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறும் அந்த வகையில் இந்த 2015–ம் ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. முதல் பிரம்மோற்சவம் ஆண்டு பிரம்மோற்சவமாக செப்டம்பர் 16ந்தேதி துவங்கி 24ந்தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாவது நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் 14ந்தேதி துவங்கி 22ந்தேதி வரை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !