ஆண்டவரின் அரவணைப்பு!
ADDED :3889 days ago
ஒரு பள்ளியில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறுவர், சிறுமிகள் மேடையேறினர். ஒரு சிறுமி மட்டும், மேடை பயம் காரணமாக உடையில் சிறுநீர் கழித்து விட்டாள். கலை நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் இதைப்பார்த்து சிரித்தனர். அந்த சிறுமி அழ ஆரம்பித்து விட்டாள். அவளது தந்தை ஓடிச்சென்று மேடையில் நின்ற தன் குழந்தையை துõக்கி மார்போடு அணைத்து ஆறுதல் சொன்னார். அதாவது, தன் குழந்தை மற்றவர்கள் முன்னிலையில் அவமானப்படுவதை, அந்த தகப்பனுடைய இருதயம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதுபோலவே நம்முடைய பரம தகப்பனாகிய ஆண்டவர் நாம் வெட்கப்பட்டு போவதை விரும்புகிறதில்லை. நமக்கு அவமானம் ஏற்படும் காலங்களில் அவர் நம்மை அணைத்துக் கொள்கிறார்.என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை என்ற வசனமும், பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை, என்ற வசனமும் இதை மெய்ப்பிக்கின்றன.