உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 41 அடி உயர காளியம்மனுக்கு சிறப்பு பூஜை!

41 அடி உயர காளியம்மனுக்கு சிறப்பு பூஜை!

திருவண்ணாமலை: கண்ணமங்கலம் அருகே, 41 அடி உயர காளியம்மனுக்கு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கண்ணமங்கலம் அடுத்த, ஐந்து புத்தூர் அருகே உள்ள எஸ்.தாங்கல் பாறை மேடு பகுதியில், 41 அடி உயர காளியம்மன் சிலை நிறுவப்பட்டு, கடந்த மாதம், கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தினமும் மண்டல பூஜைகளும், காளியம்மன் சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கிறது. கும்பாபிஷேகம் முடிந்து, 29வது நாளான நேற்று காலை, 7 மணி அளவில் கோவில் பூசாரிகள் கண்ணன், சுந்தர்ராஜ் ஆகியோர், காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளுடன், தீபாராதனை செய்தனர். இதை தொடர்ந்து, வரும், ஜூலை, 15ம் தேதி, 48வது நாள் மண்டல பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !