வயல்காட்டில் மூழ்கி உள்ள சிவலிங்கம்!
ADDED :3904 days ago
காஞ்சிபுரம் அருகிலுள்ள பிள்ளைபாளையம் என்ற ஊரில் புறாக்கோயில் உள்ளது. இந்த கோயில் வயல்காட்டின் நடுவே அமைந்துள்ளது. வயலின் சேற்றுக்குள் ஒரு சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிவனை வன்மீகநாதர் என அழைக்கின்றனர். விவசாயிகள் இந்த சிவனை வணங்கியபிறகே விவசாயப் பணிகளை துவங்குகின்றனர். இதன்மூலம் விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை.