சரியை வழிபாடு!
ADDED :3785 days ago
பரமசிவ திரிநயன பசுபதி யுனைத்தொழும்
பழவடி யர்செயல் நான்கதைப்
பகரில்உயர் சரியைகிரி யாயோக ஞானநம்
பதிகள்நதி யாத்தி ரைசெயல்
விரைகொள்நந் தனம்வைத்தல் மலர்பிணைத்(து) அவைசாத்தல்
மேவுசின கரம்அ மைத்தல்
மின்விளக் கிடுதலொடு மெழுகல்திரு அலகிடுதல்
மேலவர்க் காணில் வலமுற்(று)
இருகரம் கூப்பிவந் தனைசெயல் குளம்கிணறு
இயற்றல்நல் விரதம் ஆற்றல்
எழுகாதை கேட்டல்இவை சரியையிது நோற்றவர்கள்
எமதுலகம் அடைவர் என்றாய்
தெரிதரு பதஞ்சலி புலிப்பாதர் அனுதினம்
திருநடம் தொழுது வாழும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.