உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமர்நாத் புனித யாத்திரை துவக்கம்!

அமர்நாத் புனித யாத்திரை துவக்கம்!

ஜம்மு: அமர்நாத் புனித யாத்திரையை, ஜம்மு - காஷ்மீர் மாநில அமைச்சர்கள் லால் சிங், சுக்நந்தன் சவுத்ரி, பிரியா சேதி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதுகுறித்து, ஜம்மு கூடுதல் துணை கமிஷனர் மற்றும் அமர்நாத் யாத்திரை அதிகாரி டாக்டர் பியுஷ், ஜம்முவில் நிருபர்களிடம் கூறியதாவது:ஜம்முவில் பகவதி நகர் முகாமிலிருந்து, முதற்கட்டமாக, 1,280 பக்தர்கள் அமர்நாத்துக்கு புனித பயணம் துவக்கி உள்ளனர். இக்குழுவில், 919 ஆண்கள், 191 பெண்கள், 16 குழந்தைகள், 154 சாதுக்கள் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு டாக்டர் பியுஷ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !