ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் திருமஞ்சண அபிஷேகம்!
ADDED :3834 days ago
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் உற்சவரான பெருமாளுக்கு கடந்த ஆண்டு அணிவிக்கப்பட்ட வெள்ளிக்கவச படி களையப்பட்டது. உற்சவர், உபய நாச்சியார்களுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது.பின்னர் பெருமாள் மூலஸ்தானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டன. மாலையில் கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. தர்ப்ப சயண ராமர், பத்மாஸனித்தாயாருக்கும் திருமஞ்சனம் செய்யப்பட்டது.