உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருப்பெயர்ச்சியில் வழிபட வேண்டியது யாரை?

குருப்பெயர்ச்சியில் வழிபட வேண்டியது யாரை?

வரும் ஆனி மாதம் 20ம் நாள் (5.7.15),  ஞாயிற்றுக்கிழமை அன்று, கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.  குருபகவான். இதையொட்டி அன்பர்கள்யாவரும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்வார்கள். ஆனாலும், அன்பர்கள் மனதில் ஒரு சந்தேகம்  எழுவது உண்டு. குருப்பெயர்ச்சியில் வழிபட வேண்டியது யாரை? தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியையா, நவகிரகங்களில் வடக்கு நோக்கி  அருளும் பிரகஸ்பதியையா? இரண்டு தெய்வங்களையும் வழிபட வேண்டும் என்பதே முறை.

மெய்ப்பொருள் ஒன்றுதான். அதைப் பல பெயர்களில் அழைக்கின்றனர் சான்றோர் என்கிறது வேதம் ஆக, இறைவன் என்பவன் ஏகன்; ஒருவனே!  ஆன்றோர் பெருமக்களின் வழிகாட்டுதலால், இறைவனை பலவிதத் தோற்றங்களில் வழிபடுகிறோம். தட்சிணாமூர்த்தி தென்திசை பார்த்தபடி அரு ள்பவர் குருவுக்கும் குருவானவர். தேவர்களின் குரு பிரகஸ்பதி. வடக்குத்திசை பார்த்தபடி காட்சி தருபவர். குரு தட்சிணாமூர்த்தி பேசாமல்  மவுனமாக இருந்தே சனகாதி முனிவர்களுக்குப் பேருண்மையை உபதேசித்து அருளினார். (மவுனம் வ்யாக்யானேன) என்று தெரிவிக்கின்றன.  புராணங்கள். குரு பகவான் பிரகஸ்பதி மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவரான ஸ்ரீவாமனருக்கு ஆசிரியராகத் திகழ்ந்தவர். என்கின்றன.  புராணங்கள் பிரகஸ்பதியை பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர். எனப் போற்றி வணங்குகிறோம். ஆனால், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை, சிவாம்சமாகவே  வழிபடுகிறோம்.

மனிதனுக்கு யோகம் ஸித்திக்க வேண்டும் எனில், அதன் முதல் பயிற்சியான மவுனத்தைப் பழக வேண்டும். என்பது ஆன்றோர்வாக்கு. ஆனால் இந்த  உலகில், சாதாரணர்களாகிய, நாம். எதையுமே பேசித்தான் செயல்படவேண்டியிருக்கிறது. ஆகவே, உலகாயத வாழ்வில், முதலில் பேசும் குருவை  வணங்கிப் பிரார்த்தித்துவிட்டு, அடுத்த மவுன குருவை, தட்சிணா மூர்த்தியை வணங்கிப் பேரருளைப் பெறுவோம்.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே

எனத் தெளிவுற விளக்குகிறார் திருமூலர்.

அறியாமை இருட்டுக்கு அப்பால் எந்தவொரு பொய்த்தோற்றமும் இன்றி, குறையே இல்லாத பரிசுத்தமான, மனதுக்கும் சொல்லுக்கும் எட்டாத  அறிவும் ஆனந்த உருவும் கொண்டவர். ஞானம் அளிக்கும் தட்சிணாமூர்த்தி இதைத்தான், பேசா அநுபூதி பிறந்ததுவே என்று போற்றுகிறார். அரு ணகிரிநாதர் அதாவது சொல்லாமல் சொல்லி, பேரானந்தத்தை அளிப்பவர் தட்சிணாமூர்த்தி. அதே போல், தேவகுரு பிரகஸ்பதியும் வணங்குதலு க்கும் போற்று தலுக்கும் உரியவர். ஆங்கீரஸரின் மைந்தன; அற்புத வல்லமை கொண்டவர்; ஸ்வாரோசிஷ மன்வந்த்ரத்தில், ஸப்தரிஷிகளில் முக்கி யமானவர்; பேரறிஞராகத் திகழ்ந்தவர் எனப் புராணங்கள் பிரகஸ்பதியை விவரிக்கின்றன. பகவான், வாமன அவதாரத்தின்போது, பிரகஸ்பதியிடம்  இருந்து வேதங்கள் அதன் அங்கங்கள், உப அங்கங்கள், ஆறு சாஸ்திரங்கள், ஸ்மிருதி மற்றும் ஆகமம் ஆகிய அனைத்தையும் கற்றறிந்தார் எனத்  தெரிவிக்கிறது. ப்ருஹத் தர்ம புராணம். ஆக, உலக வாழ்வில், அனைத்திலும் வெற்றி பெற, அருள் நிதியும் அறிவுநிதியும் அள்ளித் தரும். பி ரகஸ்பதியை, அனுதினமும் வழிபட்டுப் பேரானந்தம் அடையலாம். ஒருவரது ஜாதகத்தில் குருபகவான் எங்கிருந்தாலும், அதற்காகக் கவலைப் படாமல், கலங்கித் தவிக்காமல், மாதந்தோறும் பூச நட்சத்திர நாளில் வழிபட்டால், குருவின் பேரருளைப் பெறலாம். அதேபோல், விய õழக்கிழமையும் பூச நட்சத்திரமும் ஒருசேர வருகிற நாளில் குருபகவானை வழிபட்டால் இழந்த பதவி மற்றும் செல்வங்களைப் பெற்று வாழலாம்.  என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !