குருபெயர்ச்சியன்று செய்ய வேண்டிய எளிய பரிகாரம்!
ADDED :3785 days ago
ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஜாதகத்தில் குரு பலம் குறைபாடுள்ள அன்பர்கள், வியாழக்கிழமைதோறும் பூஜை அறையை சுத்தம் செய்து, அரிசி மாவு, மஞ்சள் பொடி கலந்து கோலம் போட்டு, குருபகவானை கீழ்க்காணும் துதிப்பாடலைச் சொல்லி வழிபட்டு வரம் பெறலாம். திருவிளையாடற்புராணத்தில் பரஞ்சோதி முனிவர் அருளிய பாடல் இது.
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற்கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.