எமதண்டீஸ்வரர் கோவிலில் குருப் பெயர்ச்சி வழிபாடு!
ADDED :3861 days ago
மயிலம்: ஆலகிராமத்தில் குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது. மயிலம் ஒன்றியம் ஆலகிராமத்தில் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத எமதண்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவில் வளாகத்திலுள்ள தட்சணாமூர்த்திக்கு குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு அலங்காரம், வழிபாடுகள் நடந்தது. நேற்று முன்தினம் நடந்த சிறப்பு யாகத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குரு பகவானை வழிபாடு செய்தனர். பின்னர் மூலவருக்கு தமிழ் முறையில் அர்ச்சனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் சுந்தரமூர்த்தி செய் திருந்தார்.