பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவம்!
ADDED :3857 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில், ஆடி பிரம்மோற்சம் ஜூலை 23 ல் துவங்குகிறது. இதையொட்டி அன்று காலை 10.15 முதல் 11 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. அதன்பிறகு தினமும் காலையிலும், இரவிலும் அன்ன, சிம்ம, சேஷ, கருட, அனுமன் வாகனங்களில் பெருமாள் வீதியுலா வருவார். ஜூலை 28 ல் இரவு 7 மணிக்கு ஆண்டாள் - பெருமாள் மாலை மாற்றல் வைபவம் நடக்கிறது. 30 ல் காலை நவநீதகி ருஷ்ணன் சேவையில் முத்துப்ப ல்லக்கில் பெருமாள் அருள்பாலிக்கிறார். ஜூலை 31 காலை 9.30 மணிக்கு தேரோட்டமும், ஆக., 1 ல் காலை தீர்த்தவாரியும் நடைபெறும். இரவில் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.