கிரியை வழிபாடு
ADDED :3778 days ago
சுருதியா கமமுறையின் மஞ்சன நிவேதனம்
சுடர்தூப வாடை வாசம்
சூழுமல ராதிகொடு நற்பூசை யாற்றுவர்கள்
தோன்று புண்ணிய பாவமும்
புரையற வுணர்ந்துரைசெய் வார்மறைகள் ஆகம
புராணமுதல் நூலு ணர்ந்தே
பொங்குபல வுயிர்வதை செயார்வேள்வி யாற்றுவார்
புகழ்பெறுங் கிரியை நெறியோர்
உரைசெய்வர் தருமார்த்த காமாதி யின்பவகை
உரகத் தடைந்து வானத்(து)
உருவசி யரம்பையர்தம் இன்புற்று நமதருகில்
உறுவரென மறைபு கன்றாய்
திரைகடற் புவிபரவு சரியைகிரி யாயோக
சித்தியொடு முத்தி யுதவும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.