சாபத்திற்கு ஆளாகி விடாதீர்!
ADDED :3918 days ago
ஆறுகுழுவினரை நான் சபிக்கின்றேன். ஏனெனில் அல்லாஹ் அவர்களை சபிக்கின்றான், என்று சாபத்திற்கு ஆளாபவர்களை பற்றி நபிகள் நாயகம்குறிப்பிடுகிறார். அல்லாஹ்வின் குர்ஆன் கருத்துக்களை திரித்து அதிகப்படுத்துபவர். அல்லாஹ்வின் கத்ரை(விதித்த விதி)பொய்ப்படுத்துபவர். அடக்குமுறையாகஆட்சியைப் பெறுபவர்.ஹரம் ஷரீபை (மெக்காவிலுள்ள முகர்ரமாவில் வேட்டையாடுதல், மரங்களை வெட்டுதல் போன்ற தடை செய்யப்பட்ட செயல்கள்) ஹலாலாக (நியாயம்) கருதுபவர். என்னுடைய சந்ததியினர்களில் அல்லாஹ் ஹராம் (நியாயமற்றது) ஆக்கியதை ஹலாலாக கருதுபவர். எனது வழிமுறைகளை விட்டு விலகியிருப்பவர்.இந்த ஆறு பிரிவினரும் இறைவனின் சாபத்திற்கு ஆளாவார்கள். எனவே நபிகள் நாயகம் காட்டிய நல்ல வழிகளை பின்பற்றி வாழ்வை சிறப்புள்ளதாக்குவோம்.