காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம்!
காரைக்கால்: காரைக்கால் மாங்கனி ஒருமாதம் திருவிழாயொட்டி நேற்று முன்தினம் அம்மையாருக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா கடந்த 29ம்தேதி விக்னேஸ்வர பூஜைகளுடன் மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது. கடந்த 30ம் தேதி திருக்கல்யாணம் மறுநாள் ஜீலை 1ம் தேதி மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஒருமாதம் திருவிழாவை முன்னிட்டு பாரதியார் சாலையில் அம்மையார் கோவில் முன்பு பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. தினம் பொதுமக்கள் பார்வைக்காக நாடனம், நடகம், திரைஇசை,பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு அம்மையாருக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் ஏராளமா பக்தர்கள் கலந்து கொண்டு அம்மையாரை வழிப்பட்டனர்.