உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா உக்ரபிரத்யங்கிரா தேவி கோயிலில் லட்சார்ச்சனை!

மகா உக்ரபிரத்யங்கிரா தேவி கோயிலில் லட்சார்ச்சனை!

சிவகங்கை: மதகுபட்டி அருகே கே.சொக்கநாதபுரம் மகா உக்ரபிரத்யங்கிரா தேவி கோயிலில், சதசண்டீ மகா யக்ஞம் லட்சார்ச்சனை நடந்தது.  லட்சார்ச்சனையை முன்னிட்டு ஜூலை 13ம் தேதி காலை கோபூஜை, அனுக்ஞை, கணபதி பூஜை நடந்தது. பகல் 12 மணிக்கு தீபாராதனை, பிரசாதம்  வழங்கலும், மாலை 6 மணிக்கு சண்டீ நவாபரண பூஜை, லலிதா சகஸ்ரநாம லட்சார்ச்சனை நடந்தது.  ஜூலை 14ல் ஸப்தஸதி பாராயணம், காளி,  தாரா, திரிபுர சுந்தரி, புவனேஸ்வரி, திரிபுரபைரவி, சின்னமஸ்தா, துõமாவதி, பகளாமுகி, மாதங்கி, கமலாத்மிகா ஹோமம் நடந்தது. அன்று மாலை 6  மணிக்கு தீபாராதனை நடந்தது. 3ம் நாளான ஜூலை 15ல் காலை 11 மணிக்கு ஹோமம், சண்டீ ஹோமம், மகா பூர்ணாகுதி, கலசாபிஷேகம் நடந்தது.  பகல் 2 மணிக்கு தீபாராதனை, அமாவாசை உக்ரபிரத்தியங்கிரா யாகம் நடந்தது. மூன்று நாட்கள் நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்  செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !